Monday, 6 August 2018
Poongatru Un Per... || Vettri vizha || Prabanjan || Pallavi Vinoth || Sm...
Smule singers : https://www.smule.com/Prabanjan, #Prabanjan, https://www.smule.com/Pallavi_Vinoth
Poongatru Un Per, Vetri Vizha – 1989, Music : Ilayaraja, Singer : SP Balasubramanyam, KS Chitra
Lyricist : Vaali
Music Credits : Sivaji Productions
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
தீர்த்த கரை ஓரத்திலே
தேன்சிட்டுகள் உள்ளதிலே
கல்யாண வைபோகம்தான்
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோக பண் பாடுதே
மேலை காற்றோடு கை சேத்து நாணல்
காதல் கொண்டாடுதே
ஆலம் விழுதோடு கிளி கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈர சிறகோடு இசை பாடி திரியும்
நேரம் இதுவல்லவா
ஏதேதோ எண்ணம் தோன்ற ஏகாந்தம் இங்கே
நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே
வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேர கூடும்
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரிதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்
நீல வான் கூட நிறம் மாறி போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா
ஓயாமல் உன்னை கொஞ்சும்
ஊதாபூ வண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாபூ கன்னம்
வாடை தீண்டாத வாழை தோட்டம்
ஆனந்த எல்லைகள் காட்டும்
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
தீர்த்த கரை ஓரத்திலே
தேன்சிட்டுகள் உள்ளதிலே
கல்யாண வைபோகம்தான்
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment